Oplus_131072
திரைப்படத்தில் வருவதுபோல கையில் நாடி பிடித்துப் பார்த்து கர்ப்பத்தை உறுதி செய்வது சாத்தியமா ?
ஆமாம் !
ஆனால் அதை நீங்கள் சுட்டுவிரல் மற்றும் நடுவிரல் வைத்து தான் கணக்கிட வேண்டும். பெருவிரல் வைத்தால் சரியாக கணிக்க முடியாது. ஏனென்றால் அதுக்கும் pulse இருக்கிறது. ( Radial pulse)
சாதாரண நிலையில் ஒரு பெண்ணின் pulse – நாடி துடிப்பு ஒரு நிமிடத்திற்கு 70 – 75 தான். ஆனால் கருத்தரிக்கும் போது, 85 முதல் 90 வரை செல்லும்.
இதற்கு காரணம் இதயம் ரத்தத்தை 30 – 50% வரை அதிகமான அளவு கர்ப்பமாக இருக்கும் போது வெளியேற்றுவதால்.
இதை தான் நாம் heart rate என்றும் கூறுவோம். Blood pressure என்பதில் இதுவும் முக்கியமானதாகும். ஒரு மாதிரி பட பட வென்று இருந்தால் pulse rate அதிகமாகிவிட்டது என்பதாக இருக்கலாம்.
நல்ல athletic உடம்பு வாகு உள்ளவருக்கு 50 தான் வரும். ஆண்கள் நாடி துடிப்பை 70 மற்றும் அதற்கு கீழே வைத்திருப்பது நல்லது. சரியாக தண்ணீர் குடிக்காமல் இருப்பது, வெப்பம் அதிகமாக இருக்கும் போதும் நாடி துடிப்பு ஏறும்.
220 தில் இருந்து உங்கள் வயதை கழித்தால் வருவது உங்களின் அதிக பட்ச heart rate. உதாரணம் : 220 – உங்கள் வயது 20 = 200.




