திவிஷா தற்கொலை வழக்கு: கணவர், முன்னாள் நீதிபதி மாமியார் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை!

மத்தியபிரதேசத்தின் போபாலைச் சேர்ந்த நடிகை திவிஷாவுக்கும், வக்கீல் சமர்த் சிங்குக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்குப் பிறகு திவிஷா கணவர் வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில், மே 12ஆம் தேதி திவிஷா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கூடுதல் வரதட்சணை கேட்டு திவிஷாவை கணவர் குடும்பத்தினர் சித்ரவதை செய்ததாகவும், தொடர்ந்து மனஉளைச்சல் ஏற்படுத்தியதாகவும் அவரது குடும்பத்தினர் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் சமர்த் சிங்கும், அவரது தாயாரும், முன்னாள் நீதிபதியுமான கிரிபாலாவும் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில், தனி நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. இந்த நடவடிக்கை வழக்கில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளுக்கு வழிவகுத்துள்ளது.

Read Previous

விடுமுறை நாளுக்கு முன்பும் பின்பும்.. ரூ.423 கோடிக்கு மதுபான விற்பனை!

Read Next

முதலமைச்சர் அலுவலக மாற்றத்தில் முறைகேடா? திமுக கொறடா கேள்வி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular