சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, அதற்கு முந்தைய நாள் மற்றும் அடுத்த நாள் என இரண்டு நாட்களில் தமிழகத்தில் மதுபான விற்பனை ரூ.423 கோடியை தாண்டியுள்ளது.
ஆகஸ்ட் 14ஆம் தேதி ரூ.213.78 கோடிக்கும், ஆகஸ்ட் 16ஆம் தேதி ரூ.209.22 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாட்களிலும் சேர்த்து ரூ.9.97 லட்சத்துக்கு ஆன்லைன் மூலம் மதுபான விற்பனை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தின விடுமுறையை ஒட்டி அடுத்தடுத்து வந்த நாட்களில் நடைபெற்ற இந்த மது விற்பனை தற்போது கவனம் பெற்றுள்ளது.




