தளபதி மற்றும் தவேக கட்சி தலைவர் விஜயுடன் நேருக்கு நேராக மோதும் சிவகார்த்திகேயன்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வந்து தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடம் பதித்தவர் விஜய். இவரது அரசியல் பயணம் தொடங்கிய நிலையில் தனது இறுதி திரைப்படத்தை நடிக்கவுள்ளதாக தெரிதவித்து இருந்தார். பின்னர் அதற்கு ஜனநாயகன் என்றும் பெயர் சூட்டப்பட்டது. இந்த திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்த வேளையில், நேற்று முன்தினம் படத்தின் வெளியீட்டை படக்குழு தெரிவித்தது. பொங்கலுக்கு வரவிருக்கும் இத்திரைப்படத்தின் மேல் மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பு வைத்து இருக்கின்றனர்.
மறுபக்கம் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா என திரையுலகின் ஜாம்பவான்கள் அனைவரும் நடிக்கும் பராசக்தியின் பூஜை முடிந்து ஒரு மதத்திற்கு முன்பு இந்த படத்தின் டைட்டில் டீஸர் வெளியிடப்பட்டது.
இந்த திரைப்படம் பொங்கலுக்கு திரைக்கு வர வாய்ப்புள்ளதாக திரைத்துறையினர் கூறுகின்றனர். ஆகையால் சிவகார்த்திகேயனும் விஜய்யும் மொத உள்ளதாக பேசப்படுகிறது. அப்படி இந்த திரைப்படம் ஒன்றாக திரைக்கு வந்தால் உங்களின் ஆதரவு எந்த படத்திற்கு இருக்கும்.




