வெளிநாட்டை சேர்ந்த பல பேர் அமெரிக்காவில் குடியேறி வேலைபார்ப்பது உண்டு. அனால், இனி விசா எடுக்கும் நபர்களுக்கு ஒரு புதிய விதிமுறையை அமல்படுத்திய அதிபர்.
அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப், பதவியேற்ற முதல் நாளில் இருந்தே அமெரிக்காவின் குடியுரிமை மற்றும் வரி விதிப்பு போன்றவற்றில் பல மாற்றங்களை செய்து வருகிறார். இந்த நிலையில் இப்பொழுது அமெரிக்க தேர்தலில் வாக்களிக்கும் விதிமுறைகளை கடுமையாக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இதுமட்டும்மில்லாமல், அமெரிக்காவை தாய்நாடாக கொள்ளாதவர்கள் கள்ள ஓட்டு போடுவதை தடுக்க இந்த திடீர் நடவடிக்கை ஆனது எடுக்கப்பட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். மேலும் குடியுரிமை தொடர்பாக மற்றொரு புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அவர் கூறியது,“இனி அமெரிக்காவில் விசா கோரி விண்ணப்பிக்கும் வெளிநாட்டினர், தங்களது சமூக ஊடக கணக்குகளை அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் துறையில் பகிர வேண்டும். இதன் மூலம் அமெரிக்க அரசியல் மற்றும் கொள்கையை ஆன்லைனில் விமர்சிக்கும் நபர்கள் கண்காணிக்கப்பட்டு உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என்றும் தெரிவிதத்தார்”. இதுமட்டுமின்றி, இந்த நிபந்தனை கிரீன் கார்டுடன் அமெரிக்கா மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் நபர்களையும் உள்ளடக்கிய வண்ணம் விரிவு படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.




