தூதுவளை கொடியினத்தைச் சேர்ந்த மூலிகைகளில் ஒன்று நமது தமிழ் நாட்டில் வேலிகளிலும் வேலியை அடுத்துள்ள மரங்களின் அருகிலும் வளர்ந்து வேலியையோ மரத்தையோ தனக்கு ஆதாரமாகப் பற்றி நிற்கும் சிலர் ‘ இதைத் தங்கள் வீட்டின் கொல்லைப்புறத்திலும் வைத்து வளர்த்துப் பாதுகாத்து வருகிறார்கள் இதன் கொடிகளில் தொரட்டி போன்று வளைந்த முட்கள் நெருங்கி இருப்பதுடன் இதன் இலைகளின் மத்தியிலும் முள் இருக்கும் இலைகளை முள் நீக்கித்தான் உபயோகிக்கவேண்டும்
தூது பத்திரி யூண்சுவை யாக்கும் பூ தாது வைத்தழைப் பித்திடுங் காயது வாத பித்த கபத்தையு மாற்றும்வே றோதும் வல்லிபம் னோயு மொழிக்குமே “
_ தேரையர் குணபாடம் கூறுகிறது
இதன் மருத்துவ குணம்
தூதுவளை உணவில் சுவையைத் தரும் தூதுவளைப் பூ சுக்ல தாதுவை விருத்தி செய்வதுடன் சுக்ல நட்டம் இரவு தூக்கத்தில் சுக்லம் கழிந்துவிடுவது மனைவாழ்க்கையில் துரிதமாக வெளியாகிவிடுவது பலனற்றுத் தண்ணீர்போல் இருப்பது எப்போதும் கசிந்துகொண்டே இருப்பது மனதில் இச்சையின் எண்ணம் தோன்றியவுடன் கழிந்துவிடுவது போன்ற குற்றங்களையும் நீக்கும் காய் வாதபித்த கபதோஷங்களை நீக்கி உடலை நல்ல நிலையில் வைத்திருக்கும் இதன் சமூலம் ( அதாவது வேர் கொடி இலை பூ காய் யாவும் சேந்தது) கபம் இருமல் சஷயம் சுவாசகாசம் முதலிய கொடிய ரோகங்களைப் போக்குந் தன்மை கொண்டது தூதுவளை இலையைக் கூட்டு பச்சடி துவையல் முதலான பாகங்கள் செய்து சாப்பிடலாம் நெஞ்சுச் சளி இருமல் நீர்க்கோவை உடல்வலி புளியேப்பம் முதலியவை நீங்கத் தூதுவளையில் ஓரு பிடியை நன்கு ஆய்ந்து சிறிது பசு நெய் விட்டு வதக்கிச் சாப்பிடலாம்.




