தென் சீனக் கடலில் சரக்கு கப்பல் விபத்து.. 48 பேர் மீட்பு, 14 பேரை தேடும் பணி தீவிரம்..!!

 

 

தென் சீனக் கடலில் பயணித்துக் கொண்டிருந்த வியட்நாம் நாட்டைச் சேர்ந்த சரக்கு கப்பல், 62 மாலுமிகளுடன் திடீரென மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், வியட்நாம், சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் கடற்படையினர் இணைந்து விரிவான மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதுவரை 48 மாலுமிகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

விபத்து நிகழ்ந்து 5 நாட்கள் கடந்துள்ள நிலையில், இன்னும் காணாமல் போன 14 மாலுமிகளை கண்டுபிடிக்கும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடலின் மோசமான சூழ்நிலையையும் மீறி, பல்வேறு மீட்புக் குழுக்கள் தேடுதல் பணியை தீவிரப்படுத்தியுள்ளன.

Read Previous

நகங்களை நீளமாக வைத்திருக்கிறீர்களா?.. இந்த உடல்நல ஆபத்துகள் உங்களைத் தாக்கலாம்..!!

Read Next

6ஜி தொழில்நுட்பத்தில் புதிய திருப்பம்.. 20-க்கும் மேற்பட்ட நாடுகள் முக்கிய ஒப்பந்தம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular