சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு எதிர்க்கட்சிக் கொறடா எ.வ.வேலு கடும் பதிலடி கொடுத்தார்.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அரசியல் நோக்கத்துடன் தொடர்ந்து பேசி வருவதாகவும், சட்டப்பேரவையில் பொதுக்கூட்ட மேடையில் பேசுவதைப் போல ஆதாரமற்ற கருத்துகளை முன்வைப்பதாகவும் எ.வ.வேலு விமர்சித்தார்.
மேலும், தங்களுக்கு எந்த உள்நோக்கமும் இல்லை என்று தெரிவித்த அவர், ஏதேனும் பிரச்னை ஏற்படும் போது ஒரு தரப்பினர் அனைவரும் எழுந்து நிற்கையில், தாங்கள் அமைதியாக அமர்ந்திருக்க முடியுமா என்றும் கேள்வி எழுப்பினார்.
அவையில் விவாதங்கள் நடைபெறும் போது உறுப்பினர்களுக்கு இயல்பாக உணர்வுகள் வெளிப்படுவது தவிர்க்க முடியாதது என்றும் அவர் குறிப்பிட்டார்.




