கேரளாவின் பத்தனம்திட்டாவில் பணியாற்றும் காவல் உதவி ஆய்வாளர் ராபின் வர்கீஸ் மீது, முன்னாள் வகுப்புத் தோழி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருமணம் செய்து கொள்ள மறுத்ததால், தன்னிடம் உள்ள அந்தரங்க வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டியதாக அந்தப் பெண் புகார் அளித்துள்ளார். மேலும், பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றச்சாட்டுகள் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




