Oplus_131072
தெருவோர வியாபாரியிடம் பேரம் பேசாதீர்கள்.
பசியால் துன்பப்படும் உயிர்களுக்கு உணவு கொடு.
அன்பு, இரக்கத்தை அடிப்படையாக கொண்டு வாழ்ந்தால் நிச்சயம் கடவுள் உனக்கு அருள்புரிவார். மனிதர்கள் உருவத்தில்.
மரங்களை அழிக்காதே.
அதற்கும் உயிர் இருக்கிறது..
எல்லாம் கடவுளின் செயல் என்று அறிந்தால் துன்பம் வராது.
மெதுவாக பேசு. இது உனது ரகசியங்களை பாதுகாக்கும்.
பறவைகளை கூண்டில் அடைத்து அவற்றை துன்புறுத்தாதே.
பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டு பொய் சொல்லாதே.
‘எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும்’ என கடவுளிடம் வேண்டிக்கொள்.
நல்லவர்களின் மனம் நடுங்கும்படி செயல்படாதே.
உண்மையை பேசு. உனது வார்த்தைக்கு மதிப்பு கூடும்.
பணம் மட்டுமே வாழ்க்கை என நினைக்கும் நபர்களுடன் நட்பு கொள்ளாதே.
எப்போதும் பொதுநோக்கத்துடன் செயல்படு.
அனைவரிடமும் நல்ல விதமாக பேசி புண்ணியத்தை தேடு.
நீ செய்த புண்ணியத்தால் உனக்கு மனித பிறவி கிடைத்துள்ளது. அதை சரியாக பயன்படுத்து.
அளவாக உண்ணுங்கள்.
தேவையில்லாமல் பேசாதீர்கள்.
குடும்பத்தின் மீது அக்கறை காட்டுங்கள்.
நீண்ட நேரம் உறங்காதீர்கள்.
மற்றவர் குறைகளை பெரிதுபடுத்தாதீர்கள்.
வரவுக்கு ஏற்ப செலவு செய்யுங்கள்.
தொண்டு செய்யுங்கள்..
மற்றவர்கள் பார்வைக்கு நீ எப்படி இருந்தாலும் உன்னுடைய பார்வைக்கு நீ நீயாக இரு..




