Oplus_131072
-தேங்காயை உடைத்து அதை கேஸ் ஸ்டவ் மீது சிறிது நேரம் வைத்து சூடு படுத்தினால், எளிதில் தேங்காய் பத்தைகளாக துண்டுகள் ஆக்கலாம்.
மீதமான தேங்காயை ஃப்ரிட்ஜில் வைக்கும் போது, தேங்காய் மூடியாக வைக்காமல் அதனை திருவியோ அல்லது பத்தைகளாக துண்டுகள் போட்டோ டப்பாவில் வைத்தால் அதிக நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும்.
தேங்காய் மூடியை பயன்படுத்தும்போது முதலில் இந்த 3 கண்கள் கொண்ட மேல் மோடியை முதலில் பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் மேல் மூடியானது விரைவில் கெட்டுப் போகும்.
முழு தேங்காயை தரையில் வைக்கும்போது இந்த கண் பகுதிகள் மேல்நோக்கி இருக்குமாறு வைத்தல் வேண்டும்.
தேங்காய் பால் சிரமமில்லாமல் தயாரிப்பது எப்படி?
தேங்காய் பால் தயாரிக்க தேங்காயை மிக்ஸியில் சேர்த்து அதில் சற்று வெதுவெதுப்பான நீரை ஊற்றி அரைத்து, ஒரு துணியில் ஊற்றி நன்றாக பிழிந்தால் சிரமமில்லாமல் தேங்காய் பால் எளிதில் எடுக்கலாம். வடிகட்டியில் தேங்காய் பாலை வடிகட்டுவதைவிட, ஒரு துணியில் அரைத்த தேங்காய் விழுதை பிழிந்து எடுத்தால் அதிக அளவில் தேங்காய்ப்பால் கிடைக்கும்.




