Oplus_131072
-முதலில் இட்லிக்கு என்று அரைக்கும் மாவில் வெந்தயம் சேர்க்காமல் இருந்தால் நன்கு இட்லி வெள்ளையாகவும் மிருதுவாகவும் இருக்கும்.
-எந்த அரிசி என்றாலும் 4 டம்ளர் அரிசிக்கு, ஒரு டம்ளர் முழு உளுந்து சேர்த்தால் இட்லி மிகவும் மிருதுவாக இருக்கும்.
-மேலும் இட்லிக்கு அரிசி அரைக்கும் பொழுது மிகவும் நைசாக அரைக்காமல், சற்று கொறகொறவென்று அரைத்தால் இட்லி மிகவும் பஞ்சு போன்று இருக்கும்.
-இட்லி கொப்பரையில் இட்லி மாவை ஊற்றி 3 நிமிடங்கள் மிதமான தீயில் வேகவைத்து எடுத்தால், இட்லி சாப்டாக இருக்கும். அதிக நேரம் இட்லியை வேக வைக்கக்கூடாது.
– இட்லியை வேக வைக்கும் முன்னர், இட்லி கொப்பரையில் உள்ள தண்ணீரில் ஒரு கொத்து கறிவேப்பிலையை போட்டு, இட்லி மாவை வேக வைத்தால் இட்லி நல்ல நறுமணத்துடனும், வெள்ளையாகவும், பஞ்சு போன்றும் இருக்கும். மேலும் இட்லி எளிதில் காய்ந்து போகாமல் இருக்கும்.
-இட்லி தட்டில் போடும் துணியானது பனியன் துணியாக இருந்தால் இட்லி எடுக்கும்போது இட்லி துணியில் ஒட்டாமல், அழகாக பந்து போன்று வரும்.




