தேநீருக்கும், மதுவிற்கும் தங்களுக்குள் யார் பெரியவன் என்று ஒரு உரையாடல்..!! கடைசியில் ஜெயித்தது யார் தெரியுமா..?? படித்ததில் சிந்திக்க வைத்தது..!!

Oplus_131072

🌹☕💯தேநீருக்கும், மதுவிற்கும் தங்களுக்குள் யார் பெரியவன் என்று ஒரு உரையாடல்…
தேநீர் – என்னைத்தானே உலகம் முழுவதும் காலை, மாலை நேரங்களில் விரும்பிக் குடிக்கிறார்கள்.. அதனால் நான் தான் பெருமைக்குரியவன்..

மது – என்னையும் தான் காலை மாலை, இரவு என எல்லா நேரங்களிலும் விரும்பிக் குடிக்கிறார்கள்..
அதனால் நானும் பெருமைக்குரியவனே..

தேநீர்- மக்களின் சந்தோஷம், துக்கம், வரவேற்பு, கொண்டாட்டம் என எல்லா நிகழ்வுகளிலும்
நான் இருப்பேன்.. அவர்களுக்கு மகிழ்வான நேரத்தில் மகிழ்ச்சி கொடுப்பேன்.. கஷ்டமான நேரத்தில் ஆறுதலும் அளிப்பேன்..

மது – மனிதர்களிடம் கேட்டுப்பார், அவர்களுக்கு சந்தோஷமோ, துக்கமோ என்னிடம் தான் வருவார்கள்.. நான் தான் அவர்களுக்கு எப்போதும் துணை.. என்னிடம் நீ, போட்டி போடவே முடியாது.

தேநீர் – ஏழைகளுக்கு உணவாகவும், எல்லாக் குடும்பங்களின் விருந்துகளிலும், பல பெரிய மனிதர்களின் சந்திப்புகளிலும்
நான் தான் முதன்மையானவன்..
நீ இல்லை…

மது – ஏழைகள், தங்கள் வாழ்வின் துயரத்தை மறக்க என்னிடம் தான் வருவார்கள்.. தவிர பெரிய மனிதர்களின் விருந்திலும் எனக்குத்தான் மரியாதை.. உனக்கு இல்லை…

என்னிடம் நீ போட்டி போடவே முடியாது… என் மதிப்பை மக்களிடம் கேட்டுப்பார்.. லட்சக்கணக்கில் என் மதிப்பு இருக்கும் …
ஆனால் நீ மலிவானவன்…
எந்த நிலையிலும் நீ எனக்குச் சமமானவன் இல்லை.
ஓடிப் போய்விடு…
நானே மதிப்பானவன்..
நானே உயர்ந்தவன்…

தேநீர் – ஆமாம்,
நீ உயர்ந்தவன் தான்..
உனக்கு, நான் சமமானவன் இல்லை தான்..

ஆனால் என்னைக் குடிப்பவர்களின் உடல் நிலையை உன் அளவிற்கு நான் கெடுப்பதில்லை.
என்னைக் குடித்துவிட்டு யாரும் போதையில் தடுமாறுவதில்லை.. பெண்களிடம் , சிறுமிகளிடம் தவறாக நடக்க முற்படுவதில்லை.. போதையில் விபத்துக்குள்ளாகி குடும்பங்களை நடுத்தெருவில் விடுவதில்லை..
என்னைக் குடிப்பதால் யாரும் மானம் மரியாதை, சொத்து, வருமானம், என எதையும் இழப்பதில்லை…
யாருடைய குடியையும்
நான் கெடுப்பதும் இல்லை… இப்போது சொல்..
நான் தானே பெரியவன்??

மது – ஆமாம்.. உண்மை தான்… நான் எவ்வளவு தான் உயர்நதவனாகவும், விலை மதிப்பானவனாக இருந்தாலும் என்னால் கெடுதல் தான் அதிகம்.. நான் பெருமை பட்டுக் கொள்ள ஒன்றுமில்லை.. போட்டியிலிருந்து விலகிக் கொள்கிறேன்..

 

Read Previous

தாய், தந்தை வசிக்கும் இல்லம் பற்றிய அருமையான பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

மொறு மொறு கோதுமை தோசை செய்வது எப்படி ..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular