தேமல் பிரச்சனையால் மிகவும் அவதிப்படுகிறீர்களா..?? இதோ உங்களுக்கான தீர்வு..!!
சிறியவர்களில் இருந்து பெரியவர்கள் வரைக்கும் தோல் சம்பந்தமான பிரச்சனைகள் நோய்கள் என வருகிறது. அதுவும் இந்த நவீன காலகட்டத்தில் தான் அதிகம் வருகிறது என்று சொன்னால் அதுதான் உண்மை. இந்நிலையில் குழந்தைகளுக்கும் சரி பெரியவர்களுக்கும் சரி பொதுவாக வரக்கூடிய ஒரு பிரச்சனை என்னவென்றால் அது தேமல் பிரச்சனை தான். இந்த தேமல் பிரச்சனை மட்டும் தீரவே மாட்டேங்குது. பல மருத்துவமனை சென்று விட்டேன் பல மாத்திரைகள் சாப்பிட்டுவிட்டேன் என பலரும் புலம்பி கேள்விப்பட்டிருப்போம். இந்நிலையில், எலுமிச்சை தோலை உலர்த்தி தூளாக்கி சம அளவு பொரித்த படிகாரத்தை சிறிது தண்ணீர் சேர்த்து குழைத்து தேமலில் பூசி குளித்து வந்தால் தேமல் குறையும்.
மஞ்சள் எடுத்து நல்லெண்ணெயில் போட்டு காட்சி தேமல் மேல் தேய்த்து வந்தால் தேமல் குறையும். துளசி இலை வெற்றிலை எடுத்து அரைத்து தேமல் மேல் பூசினால் தேமல் நீங்கும்.




