நெல்லிக்காய் நீர் குடிப்பதால் இத்தனை நன்மைகளா..!! அனைவரும் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

நமது உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் முக்கியம். ஏனெனில் இப்போது இருக்கும் நவீன காலத்தில் நமது உடலுக்கு ஊட்டச்சத்து அளிக்கின்ற பொருட்களை நாம் கம்மியாக தான் சாப்பிட்டு வருகிறோம். அப்படி இன்று நெல்லிக்காய் நீரை அதிகம் குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்று இந்த பதிவில் காண்போம்.

நெல்லிக்காயில் வைட்டமின் சி ஏ ஈ கால்சியம் நார்ச்சத்து புரதச்சத்து ஆகியன அதிகமாகவே இருக்கிறது. நெல்லிக்காய் பொடியை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் எண்ணற்ற நன்மைகள் நம்மை வந்து சேரும். இதை தினமும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். அப்படி குடித்து வந்தால் நமது உடலில் இருக்கும் கொழுப்புகளை கரைக்க இது மிகவும் உதவுகிறது.

நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த இது ஒரு சரியான தீர்வாகும். இது நமது உடலை மிக ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது. நமது முகத்தில் ஏற்படும் சுருக்கங்களை அகற்றி முகத்திற்கு பொலிவை தருகிறது. ஆகையால் இத்தனை நன்மைகளைக் கொண்ட நெல்லிக்காய் நீரை நாம் உட்கொண்டு நமது உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தையும் ஊட்டச்சத்தையும் அளிப்போம்.

Read Previous

தேமல் பிரச்சனையால் மிகவும் அவதிப்படுகிறீர்களா..?? இதோ உங்களுக்கான தீர்வு..!!

Read Next

முல்லைப் பூ..!! முல்லை பூவில் இவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளதா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular