கஷ்டங்கள் விலக..!! தேய்பிறை அஷ்டமியில் பைரவரை இப்படி வழிபடுங்கள்..!!

கஷ்டங்கள் விலகி… அஷ்ட ஐஸ்வர்யங்களையும் பெற… தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வழிபடுங்கள்…!!

அஷ்டமி என்பது பைரவரை வழிபடுவதற்குரிய முக்கிய தினமாகும். மாதந்தோறும் இரண்டு அஷ்டமி திதிகள் வந்தாலும் தேய்பிறை அஷ்டமியிலேயே அதிகமானவர்கள் விரதம் இருந்து வழிபடுவது உண்டு. இந்த நாளில் காலபைரவரை வழிபட்டால் துன்பங்கள் அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கை.இறைவனை வழிபடுவதற்கு எல்லா திதிகளும் விசேஷமானவை என்றாலும், பெளர்ணமி, அஷ்டமி முதலான திதிகளில் செய்யப்படும் வழிபாடுகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை ஆகும்.பெளர்ணமி மற்றும் அஷ்டமி தினங்கள் சிவ வழிபாட்டுக்கு உரியவை. எனவே, இந்த நாட்களில் சிவபெருமானின் பைரவக் கோலங்களை வழிபடுவது சிறப்பு. அதிலும் தேய்பிறை அஷ்டமி திதி மிகவும் சக்தி வாய்ந்தது. அஷ்டமி திதியில் விரதமிருந்து பைரவரை வழிபட, பல்வேறு நன்மைகளைப் பெறலாம்.அஷ்டமி என்பது திதிகளில் எட்டாவது ஆகும். அந்த நாட்களில் விரதமிருந்து பைரவரை அர்ச்சித்து வழிபடுவது சிறப்பு.

காலத்தின் கடவுளான காலபைரவர் தலைவிதியை மாற்றக்கூடிய ஆற்றல் கொண்டவர். சிவபெருமானின் அம்சமாக பைரவர் கருதப்படுகிறார்.தமிழ் கடவுள்களில் ஒன்றான பைரவர் சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளில் ஒன்றாவார்.பௌர்ணமிக்கு பிறகு வரும் தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வழிபட்டால் அவருடைய அருளை முழுமையாகப் பெறலாம். கோவிலுக்கு சென்று பைரவரை தரிசிக்க முடியாவிட்டாலும் வீட்டிலிருந்தே பைரவரை வழிபடலாம்.

பஞ்சதீப விளக்கு :

காலபைரவர் பஞ்ச பூதங்களையும் அடக்கி ஆள்வதால் இவருக்கு கோவிலில் பஞ்ச தீப எண்ணெய் ஊற்றி, பஞ்ச விளக்குகளை ஏற்ற வேண்டும்.

அதாவது 5 அகல் விளக்குகளை எடுத்து கொள்ளுங்கள். அதில் ஒவ்வொரு விளக்கிலும் ஒவ்வொரு வகையான எண்ணெய் ஊற்றி தனித்தனியே தீபத்தை ஏற்ற வேண்டும்.நெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், இலுப்பை எண்ணெய் ஆகிய ஐந்து எண்ணெய்கள் தான் பஞ்ச தீப எண்ணெய்கள் என்று குறிப்பிடப்படுகிறது.ஒவ்வொரு விளக்கிலும் இந்த ஒவ்வொரு எண்ணெய்களை ஊற்றி, பஞ்சு திரி இட்டு தீபம் ஏற்றி, பைரவருடைய மந்திரத்தை 27 முறை உச்சரித்தால் எல்லா விதமான பிரச்சனைகளும் தீரும்.இந்த நாளில் பைரவாஷ்டகம் வாசிப்பது உள்ளத்திலும், எண்ணத்திலும் நல்ல விஷயங்களை விதைக்கும். மேலும் நேர்மறை எண்ணங்கள் பெருகி குடும்பத்தில் இருக்கும் துஷ்ட சக்திகள் அத்தனையும் நீங்க செய்து எல்லா வளங்களையும், நலன்களையும் பெற்று சுபிட்சம் அடைய செய்யும்.

Read Previous

வீட்டில் அடிக்கடி சண்டை சச்சரவு வருகிறதா..?? அப்ப கண்டிப்பா இந்த பதிவை படிங்க..!!

Read Next

முருங்கை சூப்.. இப்படி ஒருமுறை செய்ங்க..!! உடலுக்கு ரொம்ப நல்லது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular