அதாவது, 2025ம் ஆண்டு வரும் பிப்ரவரி 11ம் தேதியான (தை 29ம் தேதி) தைப்பூசம் திருநாள் வருகிறது. இந்த நாள் தான் அகிலம் தோன்றிய நாளாக கருதப்பட்டு அன்று தைப்பூசத் திருநாள் கொண்டாடப்படுகிறது. சில ஹிந்து மக்கள் இந்த தைப்பூசத் திருநாள் வருவதற்கு 48 நாட்கள் முன் இருந்தே விரதமிருந்து இந்த திருநாள் வரும்போது பழனி கோவிலுக்கு சென்று வழிபடுவார்கள். முடியாதோர் இந்த தைப்பூச திருநாள் முழுவதும் முருகனை நினைந்து விரதம் இருந்து காலை, மாலை என இருவேளையும் முருகன் கோவிலுக்கு சென்று வழிபடுவது நல்லது. முருகனுடன் முருக வேலையும் வழிபடுவது கூடுதல் சிறப்பு. ஏனென்றால் இந்த நாளில் தான் பார்வதி தாயார் முருகனுக்கு வேல் கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்த வேல் கொண்டு தான் முருகன் அழிக்க முடியாத அசுரர்களை கூட அழித்தாராம். இதனால் இந்த நாளில் முருகனை வழிபடும் போது தீய சக்திகள் நம்மை அண்டாமல், அந்த வருடம் முழுவதும் நீண்ட ஆரோக்கியத்துடனும், செல்வத்துடனும் இருப்போம் என்பது நம் முன்னோர்களின் ஐதீகம்.




