சீனாவில் உள்ள ஜின்ஜியாங் நகரில், ஆற்றின் குறுக்கே தொங்குபாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் ஏறி நின்று இயற்கையை ரசிக்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் செல்கின்றனர். அந்த வகையில் நேற்று (ஆக.8) சுற்றுலாப் பயணிகள் பலர் அங்கு சென்றனர். அப்போது, அந்த பாலத்தின் கேபிள் திடீரென அறுந்தது. இதனால் பாலத்தின் மீது நின்றவர்கள் ஆற்றங்கரை அருகே கற்கள் நிறைந்த பகுதியில் விழுந்தனர். இந்த விபத்தில், 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் 24 பேர் படுகாயமடைந்தனர்.




