தொண்டையில் ஏதும் பொருள் சிக்கி மூச்சுத்திணறுதல் ஏற்படும் போது முதல் உதவி!!!
(Emergency Procedure During Choking!)
மூச்சுத்திணறல் கீழுள்ள படங்களை பார்த்தாலே இலகுவான விளக்கம் புரியும். இந்த படங்களில் 1 வயதுக்கு உட்பட்ட மேற்பட்டவருக்கு எப்படி முதலுதவி கொடுக்க வேண்டும் என்பதை வேறுபடுத்தி அறியலாம் .படத்தை விட மேலதிகமான தகவல்களும் வாசித்து படத்துடன் ஒப்பிட்டு பயன்பெறுங்கள்.
மூச்சுத்திணறுவதற்கான காரணம் என்ன?
ஏதாவது ஒரு பொருள் தொண்டையில் சிக்கி நுரையீரல் காற்றுக்குழாயை அடைக்கும்போது மூச்சுத்திணறுதல் ஏற்படுகிறது. .
1 வயதுக்கு மேற்பட்டவருக்கு மூச்சுதிணறல் ஏற்படும் போது!!!
மூச்சுத்திணறலுக்கு உட்பட்டவருக்கு பின் பக்கமாக நின்று அல்லது முழங்காற்மடித்து தரையுடன் நின்று . உரியவருக்கு கீழ் விலா எலும்புக்குச் சற்று தாழ்வாக அவரை இறுக்கமாகக் பிடித்து. 45 பாகைக் கோணத்தில் மேல் நோக்கி விரைவாக உந்தவும். இது அவரின் மார்பு பகுதி பிரிமென்தகடு இடைப்பகுதியினூடாக மீதமாக இருக்கும் காற்றைப் பலமாக வெளியே தள்ளி அடைபட்டிருக்கும் பொருளை வெளியே கொண்டுவர உதவ செய்யும். இதை உடனடியாக 10 முறைகளுக்கு மேல் செய்யவும்.
இதற்கு வராவிடின்
உரியவரை நிமிர்ந்து படுக்கவைத்தும் ஹெம்லிக் முறையைச் செய்யலாம். உங்களுடைய ஒரு மணிக்கட்டின் உட்பகுதியை அவரின் விலா எலும்புகளுக்குச் சற்றுத் தாழ்வாக வைக்கவும். உங்களுடைய மற்றக் கையை முதற்கைக்கு மேலே வைத்து அதிகளவு அழுத்தத்தைக் கொடுக்கத் தொடங்கவும்.
1வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் எனின் !!!
குழந்தையை வசதியாக ஏந்தி தலையை சிறிது பணித்து முதுகுப்புறம் 5தடவை தட்டுவதும் அதற்கும் உரிய பொருள் வெளிவராவிடின் மூச்சுத்திணறல் சரி வராவிடின் குழந்தை நிமிர்ந்து படுக்கவைத்து இரு விரல்களை மார்பெலும்பின் மேல் வைக்கவும். உங்களுடைய விரல்களை உபயோகித்து விரைவான ஐந்து மார்பு அழுத்தங்களைக் கொடுக்கவும்.




