Oplus_131072
தோல்வி என்பது வாழ்க்கையின் முடிவு அல்ல, அது ஆரம்பம். உங்களுக்கு கொஞ்சம் தன்னம்பிக்கை இருந்தால், தோல்வியின் கசப்பான சாற்றைக் குடித்தாலும், வெற்றியின் இனிமையை நீங்கள் இன்னும் சுவைக்க முடியும் என்பதை உணர்ந்தால், வாழ்க்கையின் உண்மையான ஆரம்பம்.
தோல்வி என்பது வாழ்க்கையின் முடிவு அல்ல என்பதையும், அதிலிருந்து நாம் மீள வேண்டும் என்பதையும் அனைவரும் உணர வேண்டும்.
தோல்வியின் மூலம் நாம் கற்றுக்கொள்ளும் பாடம் வாழ்க்கையை மதிப்பு மிக்கதாக்குகிறது மற்றும் ஒரு நபரை ஒரு தனித்துவமான நபராக வடிவமைக்கிறது.
எல்லாப் பயணங்களும் நாம் விரும்பிய இடத்தில் முடிவதில்லை. அவ்வப்போது திசை மாறிச் செல்லும் பயணங்கள் தான் வாழ்க்கையின் “அனுபவம் என்ற “மிகப் பெரிய பாடத்தைக் கற்றுத் தருகிறது.
வாழ்க்கையில் தோல்வி மட்டுமே
தொடர்ந்து வந்தால் தோற்றுக் கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம் இல்லை. தோல்வியைத் தாண்டி சென்று கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம்.
உலகில் வெற்றி பெற்ற மனிதர்களை உற்று நோக்கினால் ஒன்று மட்டும் நன்றாக தெரிகிறது. அவர்களும் தோல்விகளை சந்தித்தவர்கள் தான்.
எத்தனை தோல்விகள் வந்தாலும், கஷ்டங்கள் துன்பங்கள் வந்தாலும், அவமானங்கள் வந்தாலும், அதை கண்டு அவர்கள் துவண்டு விடவில்லை, பயப்படவில்லை, பின் வாங்கவில்லை. அதை எதிர் கொண்டார்கள். சமாளித்தார்கள். முறியடித்தார்கள். முன்னேறினார்கள். அது தான் அவர்கள் உயர்வுக்கு காரணம்.
வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்கிற வைராக்கியம், அதற்கான விடா முயற்சி, தொடர் உழைப்பு ஆகிய நற்பண்புகள் தான் அவர்களை சிகரத்திற்கு கொண்டு சென்று விட்டது. அந்த எண்ணம் நமக்கும் இருக்குமானால் நாம் கூட அந்த நிலையை அசாத்தியமாக அடையலாம்.
சிதைக்க முயலும் சோதனைகளுக்கு இடையே நம்மை நாமே செதுக்கி உயரும் சாதனை தான் வாழ்க்கை.




