மதுரை மாநாடு கடந்த ஆக.21ஆம் தேதி நடந்த நிலையில், மாநாட்டில் கலந்துகொண்ட 3 தொண்டர்கள் உயிரிழந்தனர். அவர்களுக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், “நம் மீது தீராப் பற்று கொண்ட கழகத் தோழர்கள் பிரபாகரன், ரித்திக் ரோஷன், காளிராஜ் ஆகியோர் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். காலமான கழகத் தோழர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். அவர்களின் குடும்பங்களுக்கு நம் கழகம் உறுதுணையாக இருக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.
நம் மீது தீராப் பற்று கொண்ட கழகத் தோழர்கள் செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் பகுதிக் கழக நிர்வாகி திரு. R.பிரபாகரன், நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, கேம்ப் லைன் திரு. K.ரித்திக் ரோஷன், விருதுநகர் மாவட்டம், இனாம் கரிசல்குளம் கிளைக் கழக நிர்வாகி திரு. K. காளிராஜ் ஆகியோர் மதுரையில்…
— TVK Vijay (@TVKVijayHQ) August 23, 2025




