நகை கடன் ரசீது தொலைந்ததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை..!!

கந்த சாரப்பட்டி வங்கியில் அடகு வைத்த நகை கடன் ரசீது தொலைந்ததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை.

கரூர் மாவட்டம் மூக்கனாங்குறிச்சி அருகே கந்தசாரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜலிங்கம் வயது 44.

இவர் அருகில் உள்ள வெள்ளியணை பகுதியில் செயல்படும் ஐஓபி வங்கியில் நகை கடன் வாங்கி இருந்தார்.

நகை கடன் வாங்கிய ரசீதை அண்மையில் தொலைத்து விட்டார்.

இதனால் விரக்தி அடைந்த ராஜலிங்கம் நேற்று முன்தினம் அவரது வீட்டில் பூச்சிக்கொல்லி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் சிகிச்சை பலனின்றி
நேற்று உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து வெள்ளியணை காவல் துறை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Read Previous

நடத்தையில் சந்தேகம்..!! நடிகையை கத்தியால் குத்திய கணவர்..!!

Read Next

Optical Illusion: தாவரத்திற்கு நடுவில் பச்சோந்தி எங்கு உள்ளது?.. கண்டுபிடியுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular