சேலம் தாதகாப்பட்டியில், தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட கண்ணன் என்பவர் பிரிந்து வாழ்ந்து வந்த மனைவியை சமாதானப்படுத்த முயன்றுள்ளார். ஆனால், மனைவி ரதிதேவி மறுத்ததால் ஆத்திரமடைந்த கண்ணன், கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார். அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ரதிதேவி உயிரிழந்தார். அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்துள்ளனர்.




