டெல்லியின் புறநகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. வெடிகுண்டு செயலிழப்பு படை, மோப்பநாய் படை மற்றும் தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டு முழுமையான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் இது ஒரு புரளி என தெரியவந்தது. தேர்வுகளைத் தவிர்க்க விரும்பிய ஒரு மாணவரே இந்த மிரட்டலை விடுத்ததாக போலீசார் கண்டுபிடித்துள்ளனர். சம்பந்தப்பட்ட மாணவர் குறித்து விசாரணை நடக்கிறது.




