நமது உடலில் இருக்க வேண்டிய மருத்துவ அளவீடுகள்..!!

Oplus_131072

நமது உடலில் இருக்க வேண்டிய மருத்துவ அளவீடுகள்…

1.இரத்தத்தின் pH அளவு 7.35 – 7.45 என்ற அளவில் இருக்கும்.

2.சிறுநீரின் pH அளவு 4.5 – 8.0 என்ற அளவில் இருக்கும்.

3.இரத்தத்தில் கால்சியத்தின் (Calcium)அளவு 8.5 முதல் 10.5 Mg/100 மி. இரத்தம் என்ற அளவில் இருக்கும்.

4.இரத்தத்தில் குளோரின் (Chlorine)அளவு 97 முதல் 106 Mg/ஒரு லிட்டர் இரத்தம் என்ற அளவில் இருக்கும்.

5.இரத்தத்தில் கொலஸ்ட்டிரால் (Cholesterol)அளவு 140-200மி.கி/ஃ100 மி.லி. இரத்தம் என்ற அளவில் இருக்கும்.

6.இரத்தத்தில் குளுக்கோஸ் (Glucose)அளவு 63-144 மி.கி /100 மி.லி. இரத்தம் என்ற அளவில் இருக்கும்.

7.உணவு அருந்தாதபோது (Fasting)இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு 65-105 Mg/100 மில்லி இரத்தம் என்ற அளவில் இருக்கும்.

8. ஒரு லிட்டர் இரத்தத்தில் பொட்டாசியத்தின்(Pottasium) அளவு 3.3-4.7 mEq/ஒரு லிட்டர் இரத்தம் என்ற அளவில் இருக்கும்.

9. ஒரு லிட்டர் இரத்தத்தில் சோடியத்தின் (Sodium)அளவு 135-143 mEq/லிட்டர் இரத்தம் என்ற அளவில் இருக்கும்.

10.இரத்தத்தில் யூரியாவின் (Urea)அளவு 15 முதல் 44 Mg/100 மில்லி இரத்தம் என்ற அளவில் இருக்கும்.

11.நடுவயதினரின் இரத்த அழுத்தம் (Blood Pressure)சுமார் 120/80 மி.மி. மெர்குரி என்ற அளவில் இருக்கும்.

12.நாடித்துடிப்பு (Pulse Rate)ஒரு நிமிட நேரத்தில்சுமார் 60க்குக் கீழே இருந்தால்அது பிராடிகார்டியா (Bradycardia)எனப்படும்.

13.டேக்கிகார்டியா (tachycardia)என்னும் நிலையில் நாடித்துடிப்பு ஒரு நிமிட நேரத்தில்சுமார் 100க்கு மேல் இருந்திடும்.

14.சுவாசத்தின் இயக்கம் (Respiratory Activities)ஓய்வு நிலையில் ஒரு நிமிட நேரத்தில்சுமார் 15 முதல் 18 வரை என்ற அளவில் இருந்திடும்.

15. சாதாரணமாக எப்போதும் போல சுவாசிக்கும் போது(உள்ளிழுக்கப்படும் சுவாசக் காற்றில்(Inspiratory Air) வாயுமாற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட காற்றின் அளவு டைடல் வால்யூம் (Tidal Volume) எனப்படும்) டைடல் வால்யூம் என்பவை சுமார் 500 மில்லி என்ற அளவில் இருந்திடும்.

16. உள்ளிழுக்கப்படும் சுவாசக் காற்றில் வாயுமாற்றத்திற்குபயண்படுத்தப்படாத காற்றின் அளவு டெட்ஸ்பெஸ் (Dead Space Air)என்பது சுமார் 150 மில்லி லிட்டர் என்றஅளவில் இருந்திடும்.

17.ஒரு கிராம் கார்போஹைட்ரேட் (Carbohyrate)என்னும் மாவுப்பொருளில் இருந்து 4 கிலோ கலோரி (Kilo Calorie)வெப்பம் தயாரிக்கப்படுகிறது.

18.ஒரு கிராம் புரதப் பொருளில் இருந்து 4 கிலோ கலோரி (Kilo Calorie)வெப்பம் தயாரிக்கப்படுகிறது.

19.ஒரு கிராம் கொழுப்பு பொருளில் இருந்து 9 கிலோ கலோரி (Kilo Calorie)வெப்பம் தயாரிக்கப்படுகிறது.

20.நாம் சாப்பிடும் உணவில் கார்போஹைட்ரேட்டின
விகித அளவு சுமார் 55 முதல் 75 சதவிகிதம் வரை இருக்க வேண்டும்.

Read Previous

இறை வழிபாட்டில் பாம்பிற்கும், பசுவிற்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பது ஏன்..??

Read Next

வாழைப்பழத்தை அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் 4 முக்கிய தீமைகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular