நல்ல தூக்கத்திற்கு இதை மட்டும் செய்யுங்க போதும்..!!
தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன் டீ காபி குடிக்க கூடாது. அதிக உணவை உண்ண வேண்டாம். தூங்குவதற்கு முன் கண்டிப்பாக புகை பிடிக்காதீர்கள். தூங்கும் இடத்தில் சாப்பிடுவது படிப்பது விளையாடுவது போன்ற வேலைகளை செய்யாதீர்கள்.
முக்கியமாக பகலில் தூங்க கூடாது. படுக்கைக்கு இரண்டு மணி நேரத்திற்கு முன் ஸ்கிரீன் டைம் டிவி கணினி வைத்து கொள்ளாதீர்கள். உங்களுக்கு சர்க்கரை நோய் அல்லது ரத்த அழுத்தம் இருந்தால் மருந்துகளை சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும். அன்றாட வேளையில் ஒரு நிலையான வழக்கத்தை பின்பற்றுங்கள். அதில் தூக்கம் எழுதல் உடற்பயிற்சி நேரம் எல்லாமே நிர்ணயிக்கப்பட்டிருக்க வேண்டும்.




