திருவள்ளூர்: ஆவடி, பட்டாபிராமில் நாட்டு வெடி வெடித்து 4 பேர் பலியான சம்பவத்தில் மேலும் ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டில் வைத்து நாட்டு வெடி விற்றபோது ஏற்பட்ட விபத்தில் வீட்டின் உரிமையாளர் ஆறுமுகம் கைதான நிலையில், நாட்டு வெடி மொத்த வியாபாரி கோவிந்த ராஜை போலீசார் கைது செய்துள்ளனர். நாட்டு வெடி வியாபாரி விஜய் என்பவரை 2 தனிப்படைகள் அமைத்து தேடும் பணிகள் நடந்து வருகிறது.




