இமாச்சல பிரதேசத்தில் உள்ள டிரான்ஸ்கிரி பகுதியில் வசிக்கும் ‘ஹட்டி’ என்ற பழங்குடியின மக்கள் மத்தியில், ஒரு விசித்திரமான மண உறவு வழக்கம் பின்பற்றப்படுகிறது. இங்கு, ஒரு ஆணுக்கு திருமணம் முடிந்தால், அந்த பெண் அவருடைய மனைவி மட்டுமல்லாமல், அவரது அனைத்து சகோதரர்களுக்கும் மனைவியாகி விட வேண்டுமாம். குடும்பத்தில் சொத்து பிரிந்து செல்வதை தடுப்பது மற்றும் வறுமை போன்ற காரணங்களுக்காகவே இந்த நடைமுறை தலைமுறைகளாக தொடர்வதாக கூறப்படுகிறது.




