நடிகர் ரஜினிகாந்த் செப்டம்பர் 30 அன்று திடீர் உடல் நல குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்த நிலையில் அப்பல்லோ மருத்துவர்கள் நடிகர் ரஜினிகாந்த் நன்றாக இருப்பதாக தகவல் வெளிவந்த நிலையில், ஓரிரு நாட்களுக்கு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார் என்று அப்பல்லோ மருத்துவர்கள் கூறியுள்ளனர்..
ஹாஸ்பிடலில் இருந்து வீடு திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் மருத்துவமனையில் இருக்கும்போது நான் சீக்கிரம் உடல் நலம் பெற வேண்டும் என வாழ்த்திய அரசியல் மற்றும் சினிமா பிரபலங்களுக்கும் மற்றும் எனது ரசிகர்களுக்கும் மக்களுக்கும் நான் நலம் பெற பிராத்தனைகள் செய்து என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழக ரசிகர்களுக்கும் அனைத்து மக்களுக்கும் எனது உளமாற மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார், மேலும் ரசிகர்களின் பிரார்த்தனையால் நான் நலமாக உள்ளேன் என்றும் அவர்களின் பிரார்த்தனையை என்னையும் என் உடலையும் விரைவில் குணமாக்கியது என்றும் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்..!!




