கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வெடித்ததும் வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்
வெங்காயம் வதங்கியது இஞ்சி பூண்டு பேஸ்டை சேர்க்க வேண்டும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதங்கியதும் அதில் சிக்கனை சேர்க்க வேண்டும்
இஞ்சி பூண்டு பேஸ்டில் சிக்கன் நன்றாக வதங்கியது மஞ்சள் தூள் மிளகாய் தூள் மல்லித்தூள், கரம் மசாலா உப்பு மிளகு தூள் இவை அனைத்தையும் சேர்த்து வதக்க வேண்டும் பின் இரண்டு தக்காளியும் அரைத்து இந்த மசாலாவில் சேர்த்து வதக்க வேண்டும்
ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக விடவும் சிக்கன் பாதி வெந்ததும் அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் தயிர் சேர்க்கவும்
கடைசியாக கொத்தமல்லி புதினா கருவேப்பிலை சேர்த்து வதக்கி தம்மில் விடவும்
சிக்கன் கிரேவி பரிமாற தயார்..




