Oplus_131072
நீங்கள் அதிகம் உப்பை பயன்படுத்துவீர்களா….உப்பு அதிகமாக சாப்பிட்டால் என்ன நடக்கும்.!?!!
*எதுவும் அளவு தான். அளவுக்கு மிஞ்சினால்…. அமிர்தமும் நஞ்சு*.
தெரிந்து கொண்டு பயன்படுத்துங்கள்.
‘உப்பில்லா பண்டம் குப்பையிலே’ எனக்கூறுவார்கள். காரணம் உப்பு இல்லையேல் எந்தப் பொருளையும் சாப்பிட முடியாது. அறுசுவை உணவாக இருந்தாலும் அந்த சுவையை உணர வைப்பதே உப்புதான். ஆனால் அதுவே அதிகமானால்? நமது உணவில் உப்பு அதிகமானால் அல்லது அதிகளவு உப்பு எடுத்துக்கொண்டால் நாம் சந்திக்கக்கூடிய விளைவுகள் என்னென்ன என்பது குறித்து பார்ப்போம். உயர் ரத்த அழுத்தம்அதிக உப்பை உட்கொள்வது உயர் ரத்த அழுத்தத்துக்கு வழிவகுக்கும். இது இதய நோய், பக்கவாதம் மற்றும் சிறுநீரக பிரச்சனைகளுக்கு முக்கிய ஆபத்து காரணியாக உள்ளது. உப்பு ரத்த ஓட்டத்தில் தண்ணீரைத் தக்கவைத்து ரத்தத்தின் அளவை அதிகரிக்கிறது. ரத்த நாளங்களின் சுவர்களில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.திசுக்களில் நீர் தேக்கம்உப்பு அதிகமாக சாப்பிடுவதால் திசுக்களில் நீர் தேக்கம் ஏற்படுகிறது. அதிக சோடியம் உங்கள் உடலில் நீர்ச்சத்தை தக்கவைக்கச் செய்கிறது. இதனால் கணுக்கால், பாதங்கள், அல்லது கைகளில் வீக்கம் ஏற்படலாம். இது நீரிழப்பு, வீக்கம், எடை அதிகரிப்பு போன்ற அறிகுறிகளையும் ஏற்படுத்தும். சிறுநீரக பிரச்சனைகள்அதிகமாக உப்பு உட்கொள்வது சிறுநீரக செயல்பாட்டை கடினமாக்குகிறது. உடலில் உப்பு அதிகமாகும்போது சிறுநீரகம் ரத்தத்தில் இருந்து அதிகப்படியான சோடியத்தை வடிகட்ட வேண்டியிருக்கும். காலப்போக்கில், இது சிறுநீரக செயல்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, சிறுநீரக நோய் அபாயத்தை அதிகரிக்கும். மேலும் உப்பு அதிகம் உள்ள உணவுக்குப் பிறகு, சிறுநீர் கருமையாகி, அடர்த்தியாகத் தோன்றி, கடுமையான துர்நாற்றம் வீசும். ஒரு நாளைக்கு 1,500 மில்லிகிராம் உப்பு போதுமானதுதாகம்உப்பு உணவை எடுத்துக்கொண்ட பிறகு வாய் வறண்டுப்போனது போல தோன்றும். ஏனெனில், உடலில் சோடியத்தின் அளவு அதிகரிக்கும்போது, அதைத் தணிக்க நீர் தேவைப்படுகிறது. உடலில் உள்ள திரவ சமநிலையை பராமரிக்க உடனே தாகம் எடுக்கிறது. தூக்கக் கலக்கம் அதிக உப்பு பயன்பாடு தூங்குவதில் சிரமம், நள்ளிரவில் விழித்தெழுதல், சோர்வாக உணர்தல், எழுந்திருக்கும்போது தலைச்சுற்றல் போன்ற பாதிப்புகளுக்கு வழிவகுக்கும். செரிமான கோளாறுகள் அதிக உப்பு உட்கொள்ளல் காரணமாக வீக்கம், அஜீரணம் மற்றும் வயிற்று வலி போன்ற உணர்வுகள் கூட அதிகரிக்கக்கூடும். அடிக்கடி தலைவலி அதிக உப்பை உட்கொள்வது நீரிழப்பு மற்றும் ரத்த ஓட்டத்தில் மாற்றங்களுக்கு பங்களிக்கும். இது சிலருக்கு தலைவலி அல்லது ஒற்றைத் தலைவலியைத் தூண்டலாம்.இதயநோய்நம் உடலுக்கு மிகக் குறைந்த அளவு சோடியம் மட்டுமே தேவைப்படுகிறது. நாம் ஒவ்வொரு நாளும் சுமார் 1,500 மில்லிகிராம் உப்பு எடுத்துக்கொண்டாலே போதும். அதிகப்படியான உப்பு பக்கவாதம் , இதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும். இந்த சராசரி அளவு பலருக்கு இரத்த அழுத்தம் மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.




