நீட் போராட்டம் தொடர்பான வழக்கு இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணை..!!

 

 

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துணை ராணுவப் படையினர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கு இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

 

போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.

 

இந்த வழக்கில் போராட்டத்தின் போது நடந்த சம்பவங்கள், பாதுகாப்பு படையினரின் நடவடிக்கைகள் மற்றும் மனுதாரர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் குறித்து நீதிமன்றம் பரிசீலனை செய்ய உள்ளது. இந்த வழக்கின் விசாரணை முடிவுகள் மீது பல்வேறு தரப்பினரின் கவனம் திரும்பியுள்ளது.

Read Previous

BREAKING: தங்கம் விலை அதிரடி உயர்வு: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,680 அதிகரிப்பு..!!

Read Next

நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் – மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular