தமிழ்நாட்டில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1,680 உயர்ந்துள்ளது.
நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.1,05,760க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.1,680 உயர்ந்து ரூ.1,07,440க்கு விற்பனையாகிறது.
அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.210 உயர்ந்துள்ளது. நேற்று ரூ.13,220க்கு விற்பனையான ஒரு கிராம் தங்கம், இன்று ரூ.13,430க்கு விற்பனையாகிறது.
சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் உள்நாட்டு தேவையின் தாக்கம் காரணமாக தங்கம் விலையில் இந்த உயர்வு ஏற்பட்டுள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




