நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க நெல்லிக்காய் குல்கந்து செய்வது எப்படி?..

தேவையான பொருட்கள்;

  • நெல்லிக்காய் =அரை கிலோ
  • வெல்லம்= 300 கிராம்
  • தேன் =கால் கப்

செய்முறை;

முதலில் நெல்லிக்காயை கொட்டைகளை நீக்கி துருவி எடுத்துக் கொள்ளவும். பிறகு ஒரு அடி கனமான கடாயில் நெல்லிக்காயை சேர்த்து மிதமான தீயில் வைத்து கால் டம்ளர் தண்ணீரும் ஊற்றி வெல்லம் சேர்த்து நன்கு கலந்து விடவும். சிறிது நேரத்தில் வெல்லம்  கரைந்து அதன் நிறம் மாறி இருக்கும்.

தண்ணீர் வற்றும் வரை நன்கு சுருள கிளறி ஆற வைக்க வேண்டும். நன்கு ஆறிய பிறகு தேன் சேர்த்து  கலந்து விடவும். பிறகு இதனை ஒரு கண்ணாடி பாட்டிலில் சேகரித்து வைத்து விடவும். தினமும் காலையில் அரை ஸ்பூன் வீதம்  பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை எடுத்துக் கொண்டால் நோய் எதிர்ப்பு சத்தி அதிகரிக்கும்.

Read Previous

நீண்ட நேரம் அமர்ந்தே இருந்தால் ரத்தக் கட்டி உருவாகும் அபாயம்..!! மருத்துவர்கள் எச்சரிக்கை..!!

Read Next

மனைவியை 100 பேருடன்.. பணம்பறித்த தம்பதி கைது..!! போலீஸ் விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular