நெல், கரும்பு விலை உயர்வுக்கு விவசாயிகள் சங்கம் வரவேற்பு..!!

 

தமிழக அரசு அறிவித்துள்ள நெல் மற்றும் கரும்புக்கான விலை உயர்வை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்றுள்ளது. கரும்புக்கு ரூ.4,000 மற்றும் சன்ன ரக நெல்லுக்கு ரூ.2,750 என விலை நிர்ணயம் செய்துள்ளதை அச்சங்கம் பாராட்டியுள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, மோட்டா ரக நெல்லுக்கான ஊக்கத்தொகையை மேலும் உயர்த்த வேண்டும் என்றும் விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. மேலும், தவெக அரசு தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியின்படி விவசாயிகளின் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது. விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

 

Read Previous

 மனச்சோர்வை அலட்சியப்படுத்தாதீங்க..!! தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி அவசியம்..!!

Read Next

கடலூரில் கார் ஓட்டுநர் கொடூரக் கொலை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular