பகிர்: சபரிமலை பிரசாதத்தில் அதிக பூச்சிக்கொல்லி மருந்துகள் கலப்படம்..!!

கார்த்திகை மாதம் மாலை அணிந்து காக்கி,கருப்பு உடையில் ஒரு திங்கள் விரதம் இருந்து சபரிமலைக்கு பக்தர்கள் சென்று வழிபடுவது வழக்கம், அந்த சபரிமலை பிரசாதத்தில் அதிக பூச்சிக்கொல்லி இருப்பதாக தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…

திருப்பதி லட்டுவில் மாட்டு கொழுப்பு கலக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அடுத்த சபரிமலை பிரசாதமும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அங்கு வழங்கப்படும் அரவண பாயாசம் பிரசாதத்தில் அதிகளவு பூச்சிக்கொல்லி மருந்து கலக்கப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது இதை அடுத்து ஓராண்டாக விநியோகிக்காமல் இருந்த தன் கணக்கிலான அரவணைப்பயசத்தை உரமாக பயன்படுத்த திருவாங்கூர் தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது, இதனால் பக்தர்கள் பெரும் அதிர்ச்சியில் தள்ளப்பட்டுள்ளனர், மேலும் சபரிமலை பிரசாதத்தை ஆய்வு செய்து வெளியிட்ட அறிக்கையில் பூச்சிக்கொல்லி மருந்து அதிகளவில் கலக்கப்பட்டு உள்ளது என தெரிய வந்துள்ளது இதனை சாப்பிடும் பொழுது உடலில் நோய் தொற்றுகள் மற்றும் உடலில் உள்ள உறுப்புகள் நோய் தாக்கத்தினால் பாதிப்படைந்து விடும் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது, இனையவாசிகள் பலரும் இனிவரும் காலத்தில் பிரசாதங்களை ஆரோக்கியமான முறையில் செய்து தாருங்கள் என்று பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்..!!

Read Previous

விமானப்படை சாகச நிகழ்ச்சியில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு விஜய் இரங்கல்..!!

Read Next

ரத்தன் டாடா : நலமுடன் இருக்கிறேன் வீண் வதந்தி வேண்டாம்…!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular