பகுத்தறிவு என்றால் என்ன..?? பொதுவாக அனைவருக்கும் தேவையானதே இப்பகுத்தறிவு..!!

Oplus_131072

#பகுத்தறிவு என்றால் என்ன ?? பொதுவாக அனைவருக்கும் தேவையானதே இப்பகுத்தறிவு !!

பகுத்தறிவு என்ற உடனே எல்லோருக்கும் நினைவில் வருவது கடவுள் மறுப்பு கொள்கை !!
ஆனால் அது அப்படி இல்லை !! அறிந்ததை உங்களுள் பகுத்து ஆராய்ந்து அறிந்துகொள்வதே பகுத்தறிவு ..
ஆனால் இன்று பகுத்தறிவு குறித்து பேசுபவர்கள் யாரும் பகுத்தறிவை அறியாதவர்களாகவே இருக்கிறார்கள், அதனாலே நாத்திகம் பேசுகிறார்கள் ..

பகுத்தறிவு என்றால் என்ன என்று பார்ப்போம் ??

நாம் படித்தது, தெரிந்தது, அறிந்தது, அறிவிக்கப்பட்டது, யாரோ சொன்னது என்று உங்களுக்கு அறிவிக்கப்பட்டதை, அப்படியே ஏற்காது ..
அதை உங்களுள் கொண்டு, அதை பகுத்து ஆராய்ந்து அறிந்துகொள்வதே பகுத்தறிவு ஆகும் ..

சில விஷயங்களை மேலோட்டமாக பார்க்கும்போது கிடைக்காத விஷயங்கள்
அதன் உள்ளோட்டமாக கொண்டு அனுபவிக்கும்போதே புலப்படும் ..

இதற்க்கு இதுதான் பொருள் என்று அவரவர் அறிவுக்கு எட்டியதை அறிவிக்க கூடும் ..
ஆனால்
அதை கடந்த பொருள் உங்களுக்கு என்று அதில் சர்வ நிச்சயமாக இருக்கும் ..

அவர் சொன்னால் சரி ?? என்று எதையும் மூடத்தனமாக நம்பாது ..
சொல்லியதை பலவேறு கோணத்தில் பகுத்து அறிந்து கொள்வதே பகுத்தறிவாகும் ..

ஒருவருக்கு ஒன்றில் கிட்டிய அனுபவமே, அனைவருக்கும் கிட்டும் என்றால் நீங்கள் நீங்களாக வாழாது, அந்த ஒருவரை மாதிரி வாழ்கிறீர்கள் என்றே அர்த்தம் ..
மாதிரி என்றுமே அசல் ஆகாது தானே ..

படியுங்கள், தெரிந்துகொள்ளுங்கள், அது உங்களுக்கு என்ன சொல்கிறது என்பதை பகுத்து அறிந்துகொள்ளுங்கள் ..

பகுத்தறிவே உங்கள் தனித்துவம் ..

அந்த தனித்துவத்தை உணர்ந்தார், தனக்கான வாழ்வாய், வாழ்வார் ..
மாதிரி ?? போல ?? என்ற பொய்யாய் இல்லாது மெய்யாய்..

பகுத்தறிய தெரிந்தவன் எவனுக்கும் கொடிபிடிக்க மாட்டான் ..
அப்படி இருந்தால் அவன் தனித்துவத்தை உணராது இருக்கிறான் என்றே அர்த்தம் ..

 

Read Previous

உடலில் ரத்தம் குறைவாக உள்ளதா..?? வெல்லத்துடன் இதனை சேர்த்து சாப்பிட்டு பாருங்கள்..!! உடனடி தீர்வை பெறலாம்..!!

Read Next

முழு பூசணிக்காயை சோற்றில மறைச்சிட்டானு ஊரில சொல்வாங்களே….அந்த கதைவந்தது எப்படி தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular