படித்ததில் பிடித்தது: அம்மா என்பவள் சுயநலத்தின் அர்த்தம் தெரியாதவள்..!!
அம்மா:
நமக்கென்று கொஞ்சம் சேமிப்போம் என்ற சுயநலத்தின் அர்த்தம் தெரியாதவள்.
எத்தனை முறை கேட்டாலும் தானக்கென்று ஏதும் ஆசைகளில்லை எனபொய்யுரைப்பாள்.
நாம் கோவத்தில் வார்த்தைகளை கண்மூடிதானமாய் வீசும் போதல்லாம் சிறு வயதில் நாம் உமிழ்ந்த எச்சலின் மீதியென்றெண்ணி நாகர்வாள்
கழுத்தைநெறிக்கும் சூழல் என்றாலும் பிள்ளைகளுக்கு தெரியாமல் கண்ணில் தூசியென கதைசொல்லி கடந்துவிடுவாள்
அப்பாவின் அதட்டலுக்கும் பிள்ளைகளின் பிதற்றலூக்கும் தலையாட்டி கடைசியிவரை கேட்க ஆளின்றி தன்னுடைய கருத்தை தனக்குள்ளே பூட்டிக்கொள்ளும்இவள் சகிப்புத்தன்மை கடவுளுக்கும் இல்லை.



