படித்ததில் பிடித்தது..!! ஆயாவின் நினைவை மனதில் அசை போட்ட தருணம்..!!

ஆயாவின் நினைவை மனதில் அசை போட்ட தருனம்

அம்மா பெற்றடுத்த தாய் என்றாள்
பாட்டி வளர்ப்பு தாய்
பெற்ற பாசத்தை விட வளர்ப்பு பாசம் ஒருபடி ஒசாத்தி என்பார்கள் கிராமத்தில்
எனக்கும் அப்படிதான்
பாட்டியை(ஆயா)
ரொம்ப பிடிக்கும்

பால்குடி மறந்ததில் இருந்து என் ஆயாவோடுதான்
என் உலகம்
எல்லோருக்கும் பாசமான ஆயா அமைவதுயில்லை அது ஒரு வரம் என்பேன்
ஆயா ஒரு பெண்ணா இருந்தாலும் பேயற்த்திகள் மீது அக்கறை காட்டாது அவளுங்க அடுத்த வீட்டுக்கு போறவளுங்க தானே என்று ஒரு இலக்காரமாகதான் பேசும்

எதுவாக இருந்தாலும் எனக்கு ஒரு மடங்கு அதிகமாகதான் கொடுக்கும்
இப்போ நொறுக்கு தீனி என்றால் பேக்கரி ஐய்டமாகிவிட்டது
அப்போ எல்லாம்
பச்சைபயிற்
தட்டைபயிற் மொச்சைபயிற்
கிழங்குவத்தல்
முறுக்கு
வடை இதுதான்
இவைகளில் ஏதாவது ஒன்று எனது ஆயா
தினம் செய்து
பள்ளியில் இருந்து வந்தவுடன் கொடுத்துவிடும்
தினம் பால் தயிர்
மோர் முட்டை
இல்லாமல் உணவே இருக்காது
வயலுக்கு அதிகம் செல்வது இல்லை இருந்தாலும்
வேலையாட்கள் மூலையமாக
ஒவ்வொரு சீசனில்
என்ன பழங்கள் கிடைக்குமோ அத்தனையும்
எனக்காக சேகரித்து வைத்துயிருக்கும்

இதைவிட இன்னோர் வேலை செய்யும்
அதுதான் பாசத்தின் உச்சம்

ஊருக்குள் எந்த உறவுகாரங்க வீட்டு சுப மற்றம் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் அங்கு கொடுக்கும் பலகாரங்களை அப்படியே பத்தர படுத்தி யாருக்கும் தெரியாமல் எனிடம் கொடுத்துவிடும்

ஆயாவின் பாசத்திற்கு
ஈடு இணை இந்த உலகத்தில் எதுவுமே இல்லை என்பேன்
மீண்டும் ஒரு பிறவியிருந்தால் என் பாட்டிக்கே நான் பேரனாக பிறக்க வேண்டும்

Read Previous

இந்த தகவல்களை எல்லாம் நம் அன்றாட வாழ்க்கையில் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்..!!

Read Next

கல்யாணத்துக்குப் பிறகு இருக்கும் வாழ்க்கையைப் பற்றிய ஒரு முக்கியமான பதிவு..!! நம்மில் பலரும் இதையெல்லாம் கடந்து தான் வந்திருப்போம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular