மிகப் பெரிய அறிஞர் ஒருவர் ஒரு முறை ஒரு கிளியை வாங்கினார். வீட்டுக்குக் கொண்டு வந்தவுடன், “உனக்குப் பேசச் சொல்லித் தருகிறேன்” என்றார். கிளியோ, “எனக்கு ஏற்கெனவே பேசத் தெரியும்” என்று சொன்னது.
பெருத்த ஆச்சரியத்தோடு அந்தக் கிளியைத் தன் பல்கலைக்கழகத்துக்கு எடுத்துப் போனார். தன்னிடம் பேசும் கிளி இருப்பதாகச் சொன்னார். எல்லோரும் அதைப் பார்க்கவும் அது பேசுவதைக் கேட்கவும் கூடினார்கள். ஆனால் அந்தக் கிளி பேசவே இல்லை. அவரோ அது தன்னிடம் பேசியது என்று சொல்லி அதனால் பேச முடியும் என்று வலியுறுத்திச் சொன்னார். யாரும் நம்பத் தயாராக இல்லை. கடைசியாகப் பந்தயம் கட்ட அவர் தயாரானார். ஒன்றுக்குப் பத்து என்று பந்தயம் கட்டியதில் அந்த அறிஞர் மிக மோசமாகத் தோற்றுப் போனார்.
வருத்தத்தோடு வீடு திரும்பியவர் அந்தக் கிளியிடம் ‘முட்டாளே! பார்த்தாயா எனக்கு எவ்வளவு நஷ்டம் உன்னால்?” என்றார்.
அந்தக் கிளியோ “நீங்க தான் முட்டாள். நாளைக்கு என்னை அங்கே கொண்டு போய் ஒன்றுக்கு நூறு என்று பந்தயம் கட்டுங்கள். பல மடங்கு சம்பாதித்து விடலாம்” என்று சொன்னது.




