படித்ததில் ரசித்தது..!! அவசரக்காரன்- ஒரு நகைச்சுவை கதை..!!

Oplus_131072

படித்ததில் ரசித்தது 😜😜😜

அவசரக்காரன்- ஒரு நகைச்சுவை கதை 😅😅

ஒரு கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் …சிறிய சச்சரவு… பெரிதாகி… கடந்த மூன்று நாட்களாக இருவருக்கும் பேச்சு வார்த்தையில்லை..

இது நீடிக்கவே… மனைவி அவள் கணவன் எதிரில் வந்து…

நான் இப்போது 10 வரை எண்ணுவேன் ! அதற்குள் நீங்கள் பேசவில்லை என்றால்…

நான் எனது அம்மா வீட்டிற்குப் போய் விடுவேன்.

அவனுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.. அவன் அதைத் தான் எதிர்பார்த்திருந்தான்.

அவள் எண்ணத் துவங்கினாள் …. ….

மனைவி – 1 … 2 … 3 …

கணவன் – (அமைதி) … !

மனைவி – 4 … 5 …

கணவன் – (மவுனம்)

மனைவி – 6 … 7…

கணவன் – (அவன் மனதில் மகிழ்ச்சி… ஆனாலும் அமைதி)

உச்சகட்டம் நெருங்கிக் கொண்டிருக்கிறது …

மனைவி – 8 … 9 …

கணவன் – (மனதில் எல்லையற்ற மகிழ்ச்சி …)

மனைவி – …

(அமைதி) …

(பயங்கர மவுனம்)

பிறகு கணவனால் மகிழ்ச்சியைத் தாங்க முடியவில்லை.

உணர்ச்சி வயப்பட்டு கத்தினான் !

எண்ணு … எண்ணு …

ஏன் மேற்கொண்டு எண்ணாமல் நிறுத்திவிட்டாய்?

மனைவி – ( மிகவும் அமைதியாக) நல்ல வேளை! நீங்க பேசிட்டீங்க… இல்லைனா நான் போயிருப்பேன் …!

கணவன் – 😗😗

பின் குறிப்பு …

எப்பவுமே கணவன்மார்களுக்கு அவசரம் தான். சிறிது நேரம் பொறுமையை கடைபிடித்து இருக்கலாம்.

நல்ல ரசனையுடன் படித்தால் பிரமாதம்😄😄

 

Read Previous

கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான்..!!

Read Next

பிரா அணியாவிட்டால் மார்பகங்கள் தளருமா..?? பெரிய மார்பகங்கள் சிக்கலை ஏற்படுத்துமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular