தமிழ்நாட்டில் கொட்டித் தீர்த்து வரும் கனமழை காரணமாக இன்று (அக்.22) 17 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மழை காலத்தையொட்டி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து பள்ளிகளுக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளி வளாக கட்டடங்களில் உறுதி தன்மையை ஆய்வு செய்ய வேண்டும், தேங்கிய தண்ணீரை அகற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பணிகள் நாளை (அக்.23) நடைபெறவுள்ள நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா என மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.




