பருக்கள் மறைய இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!

Oplus_131072

பருக்கள் மறைய

துத்தி இலையை அரைத்துப் பருக்கள் மீது தடவிவரப் பருக்கள் மறையும்.

நன்னாரி வேர் கஷாயத்தால் பருக்கள் தீரும்.

வெட்டி வேர் நூறு கிராம், சந்தனத் தூள் 25 கிராம் ஆகிய இரண்டையும் தூள் செய்து நீர்விட்டுக் கலந்து கட்டிகள் மீது தடவிவர, முகப் பருக்கள், வேனல் கட்டிகள் மாறும்.

பாசிப் பருப்புப் பொடியுடன் நெல்லிக்காய் தூள் கலந்து சோப்புக்குப் பதில், தினசரிக் குளிக்கப் பயன்படுத்தினால் பரு மாறி உடல் ஒளிபெறும்.

சாதிக்காய், சந்தனம், மிளகு ஆகிய மூன்றையும் அரைத்துப் பற்று போட, பரு மறையும்.

முகம் பளபளப்பாக: முகத்தில் தழும்புகள் அதிகம் இருந்தால் ஆவாரை இலை சாறு எடுத்து முகத்தில் தடவிவரத் தழும்புகள் மறைந்து, முகம் பளபளப்பாக மாறிப் பொலிவு பெறும்.

வசீகரம் பெற: அருகம்புல்லை நன்கு அரைத்து, அத்துடன் சம அளவு பசு நெய் சேர்த்து, 40 நாட்கள்வரை உட்கொண்டால், முக வசீகரம் கிடைக்கும்.

வறண்ட சருமத்துக்கு: உடல் வறண்டு காணப்பட்டால் நெல்லிக்காய், நிலக்கடலை, எலுமிச்சைச்சாறு ஆகியவற்றை அவ்வப்போதுச் சாப்பிட்டு வரவேண்டும்….

 

Read Previous

ஒரு முறை தேய்த்தால் உங்கள் வெள்ளை முடி வாழ்நாள் முழுவதும் கருப்பாக இருக்கும்..!!

Read Next

நெஞ்சு அசௌகரியம் மற்றும் வாய்வுத் தொல்லைக்கு இந்தப் பால் உதவுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular