பெண்களுக்கு வெள்ளைப்படுதல் என்பது சாதாரணமான விஷயம் தான்.. ஆனால் அது அதிகமாகும் போதோ அதில் நாற்றம் வந்தாலோ கர்ப்பப்பையில் புண்கள் ஏற்பட்டிருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது..
என்னுடைய பல பதிவுகளில் நான் சொல்லியிருந்தது போல பிறப்புறுப்பு சார்ந்த புண்கள் பாலியல் உறுப்புகள் சார்ந்த புண்கள் பிரச்சனைகள் பெரும்பாலானவற்றிற்கு காரணம் உடல் சூடு தான்…
கல்லீரலுக்கு கீழே மிக சிறிய அளவில் பித்தப்பை இருக்கும் இதே அமைப்புடன் இருப்பதால்தான் இந்த செடியின் பெயர் கீழாநெல்லி.. ஒவ்வொரு செடிக்கும் கீழே நெல்லிக்காய் அளவு படத்தில் உள்ளது போல் இருக்கும்
இந்த இலையை அரை எலுமிச்சை பழ அளவுக்கு நன்கு அரைத்து காலை வெறும் வயிற்றில் அப்படியே முழுங்கி விட்டு ஒரு டம்ளர் மோர் குடித்துக் கொள்ளலாம்..
இரண்டு மூன்று மணி நேரத்தில் மலத்தில் சூடு அனைத்தும் வெளியேறும்.. ஒன்று இரண்டு நாளில் அந்த வெள்ளைப்படுதல் பிரச்சனை சரியாகும்..
இந்த இலை மஞ்சள் காமாலைக்கு சரியாகும் என சொல்லி இருப்பார்கள் மஞ்சள் காமாலையை விட பல பிரச்சினைகளுக்கு இது அருமருந்து..




