கோடை வெயில் தாக்கத்தால் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிப்போகிறது என்ற தகவல் வேகமாக பரவி வந்தது. இந்நிலையில், இதுகுறித்து விளக்கமளித்துள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், தமிழகத்தில் வெப்ப அலை குறையுமா என வானிலை மையத்திடம் விவரங்கள் கேட்டுள்ளோம். அந்த விவரங்கள் கிடைத்தவுடன் முதல்வர் ஜோசப் விஜய்யுடன் ஆலோசித்து பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என கூறியுள்ளார்.




