பாஜகவில் இருந்து விலகுகிறாரா சரத்குமார்? வெளியான வதந்திகளுக்கு X பதிவு மூலம் முற்றுப்புள்ளி..!!

 

பாஜகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் சேரப்போவதாக வெளியான ஊகங்களுக்கு மத்தியில், பாஜகவின் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு சரத்குமார் வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட X பதிவு அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் பதிவின் மூலம் கட்சி மாறுவது குறித்த வதந்திகளுக்கு அவர் மறைமுகமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். அதேவேளை, புதிய நிர்வாகிகள் பட்டியலில் சரத்குமார் பெயர் இடம்பெறாதது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கேள்விகளை எழுப்பியுள்ளது.

மேலும், தொடர்ந்து அவருக்கு கட்சியில் புதிய பொறுப்புகள் வழங்கப்படாதது ஏன் என அவரது ஆதரவாளர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

 

Read Previous

சென்னையில் சாதிப் பெயர் கொண்ட 77 தெருக்கள்: பெயர் மாற்றும் பணி தீவிரம்..!!

Read Next

CJP போராட்டத் தடை வாபஸ்: மாணவர்களின் ஜனநாயக உரிமைகளுக்கு வெற்றி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular