தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று (செப்.11) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பிரச்னைக்கு பாஜகவே காரணம். பாஜகதான் தந்தைக்கும் மகனுக்கும் இடையே மோதலை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. பாஜக யார் யாரோடு உறவு வைக்கிறதோ அங்கெல்லாம் பிரச்னை தான்” என தெரிவித்துள்ளார். பாமக-வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து அன்புமணி நீக்கப்பட்டது குறித்து செல்வப்பெருந்தகை பதிலளித்துள்ளார்.




