பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். 86 வயதான ராமதாஸுக்கு 2013-ம் ஆண்டு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து அவ்வப்போது மருத்துவப் பரிசோதனை செய்து சிகிச்சை மேற்கொண்டுவந்தார். அந்தவகையில் தற்போது இதயம் சார்ந்த பிரச்னைக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதோடு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்படும் என கூறப்படுகிறது. இன்று மாலை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.




