தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை பொதுத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிட விரும்புவோர், விருப்ப மனுக்களை வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்ட அறிவிப்பின்படி, “தைலாபுரம் தோட்டத்தில் வருகிற ஜன.09ஆம் தேதி காலை 10 மணி முதல் விருப்ப மனுக்களை வழங்கலாம். தைலாபுரம் அலுவலகத்தில் மனுக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டு, பூர்த்தி செய்து கொடுத்தவுடன் ரசீது வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.




