விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழில் எட்டாவது சீசன் நடைபெறுகிறது பிக் பாஸ்க்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உண்டு ஒவ்வொரு முறையும் உலகநாயகன் கமலஹாசன் இயக்கத்தில் பிக் பாஸ் நூறு நாட்கள் நடக்கும் அப்படி இருக்க இந்த முறை பிக் பாஸ் எட்டு சீசன் நடிகர் விஜய் சேதுபதி தலைமையில் இயங்குகிறது…
விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது மக்கள் பெரிதும் பிக் பாஸ் நிகழ்ச்சியை விருப்பத்துடன் விறுவிறுப்பாக பார்த்து வருகின்றனர் அந்த வகையில் இன்றைய அக்டோபர் 9ஆம் தேதிக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது அதில் நடிகர் ரஞ்சித் மற்றும் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் ரஞ்சித் ரவீந்தரை அடிக்கடி முயல்வது போன்ற காட்சிகளும் இடம் பெற்றுள்ளது இந்த ப்ரோமோ ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, மேலும் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை இதற்கான சரியான தீர்ப்பை பிக்பாஸ் ஒருங்கிணைப்பாளர் விஜய் சேதுபதியிடம் எதிர்பார்க்கப்படுகிறது என்று பிக்பாஸ் ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர்..!!




